நடிகை சங்கீதா பாலா இயக்கத்தில் வந்த பிதாமகன் படத்தின் மூலம் பிரபலமானவர். இப்படத்தில் அவர் கஞ்சா வியாபாரி கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்ததை மறக்க முடியாது.
தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மற்ற மொழிகளிலும் படங்களில் நடித்து வந்தார். பிரபல பாடகர் கிருஷ் என்பவரை அவர் 2009 ல் திருமணம் செய்துகொண்டார்.
சமீபத்தில் நடிகை சங்கீதாவின் தாய் பானுமதி தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அப்புகாரில், வயதான என்னை வெளியேற்றிவிட்டு நான் வசித்துவரும் வீட்டை அபகரிக்க முயல்கிறார் என் மகள் சங்கீதா என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த புகார் தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு சங்கீதாவுக்கு ஆணையம் சம்மன் அனுப்ப, இரு தினங்களுக்கு முன் கணவர் க்ரிஷுடன் ஆணையத்தில் ஆஜரானார் சங்கீதா.
இந்த புகார்க்கான காரணம் என்னவென்றால், சங்கீதா பேரில் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டை தன் அண்ணன் தம்பிங்க அபகரிச்சுடுவாங்களோனு சங்கீதாவுக்கு சந்தேகம். அதுக்கு தன் அம்மாவும் துணைபோயிடுவாங்களோனு பயப்படுறாங்க. இந்தச் சூழல்ல வீட்டைவிட்டு வெளியேறச் சொன்னா அவங்க எங்கப்போவாங்க? அதனாலதான் மகளிர் ஆணையத்துல புகார் தந்திருக்காங்க.