நடிகர் மகத்தும், மாடலும், தொழில் அதிபருமான பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வருகின்றனர்.
இந்நிலையில் மகத்துக்கும், பிராச்சிக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. எளிமையாக நடந்த இந்த நிகழ்ச்சியில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர்.
நிச்சயதார்த்தம் நடந்தபோதிலும் இன்னும் திருமண தேதி முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
நிச்சயதார்த்தம் பற்றி மகத் போட்ட ட்வீட்டை பார்த்த பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
👫❤️ #Engaged pic.twitter.com/JIbzNjefKp
— Mahat Raghavendra (@MahatOfficial) April 17, 2019