டிக் டாக் செயலியை தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று மதுரை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ‘டிக்-டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். டிக்-டாக் செயலி மூலம் எடுத்த வீடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக்கூடாது என்று உத்தரவிட்டது. இந்த வழக்கு குறித்து மத்திய அரசு பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கின் மறு விசாரணையில், ஆப்பிள் , கூகுள் ஆகிய நிறுவனங்கள் டிக் டாக் செயலியை நீக்கும்படி நீதிபதிகள் எச்சரித்திருந்தனர். இதனையடுத்து கூகுள் நிறுவனம் இந்தியாவில் டிக் டாக் செயலியை பயன்படுத்த முடியாதபடி ப்ளேஸ்டோரில் இருந்து நீக்கி உள்ளது.