Home / சினிமா / பிரமிக்கவைக்கும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் புதிய வீடு – அசரவைக்கும் புகைப்படம் உள்ளே

பிரமிக்கவைக்கும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் புதிய வீடு – அசரவைக்கும் புகைப்படம் உள்ளே

சமீபகாலமாக சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்தின் தலைவர் சரவணனே நடிக்கத் தொடங்கினார். தற்போது அவர் நாயகனாக நடிக்க முடிவெடுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் தனது சொந்த ஊரான திருநெல்வேலி புறநகர் பகுதியில் பிரம்மாண்டமாய் வீடு ஒன்றை கட்டி கிரஹப்பிரவேசம் செய்துள்ளார். ’லெஜெண்ட் சரவணன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த மாளிகையில் அத்தனை வசதிகளும் உள்ளன.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்கும் வகையில் மூன்றடுக்கு மாளிகையில் சமையல் அறையே ஆயிரம் கன சதுரடிக்கு மேல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வீட்டை பார்த்து உள்ளூர்வாசிகள் வாயடைத்துப்போய் கிடக்கிறார்கள். சென்னையில் வசிக்கும் அருள், எப்போதாவது தனது சொந்த ஊரான நெல்லைக்கு சென்றால் இங்கு ஓரிரு நாட்கள் தங்கி ஓய்வெடுக்க இந்த ‘சின்ன வீட்டை’ பிரம்மாண்டமாய் கட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *