Home / சினிமா / அஜித்தின் வெற்றிப்பட இயக்குனருடன் சினிமாவில் அறிமுகமாகும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி

அஜித்தின் வெற்றிப்பட இயக்குனருடன் சினிமாவில் அறிமுகமாகும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி

தி லெஜண்ட் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி விரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். அண்ணாச்சியின் சரவணா ஸ்டோர் விளம்பரத்தை யாராலும் மறக்க முடியாது.

சமீபத்தில் அண்ணாச்சி படத்தில் நடிக்க உள்ளார் என்று வதந்திகள் பரவிக்கொண்டு இருந்தது. இப்போ தானும் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ள நிலையில் அஜித்தின் உல்லாசம் படத்தை இயக்கிய ஜுடி-ஜெர்ரி இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இப்படத்துக்காக வட இந்தியாவிலிருந்து பிரபல ஹீரோயினும் கமிட் ஆகவுள்ளதாக கூறியுள்ளனர். இப்படம் குடும்பப்பாங்கான கருத்துள்ள கதையாக இருக்க வேண்டும் என்று அண்ணாச்சி கூறிவிட்டாராம்.

விளம்பரத்தில் மட்டும் பார்த்த அண்ணாச்சியை விரைவில் வெள்ளித்திரையில் காண்பதற்காக பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *