சினிமாவில் வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் விக்ரமும் ஒருவர். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுப்பது மட்டுமில்லாமல் படத்திற்காக தன்னை வருத்தி நடிக்கக்கூடியவர்.
இவரது நடிப்பில் நடிகர் கமலின் தயாரிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் படம் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. மேலும் கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்தின் ஷூட்டிங் மீண்டும் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் சங்க தேர்தலுக்கு வாக்களிக்க நடிகர் விக்ரம் வந்துள்ளார். நீளமான முடி, வெள்ளை தாடி என அவரது தோற்றத்தில் திடீர் மாற்றத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர்.
தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இருப்பினும் இது எந்த படத்துக்கான புதிய கெட்டப் என்று ரசிகர்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.