நடிகை சமந்தாவுக்கு தமிழில் அண்மையில் வந்த சூப்பர் டீலக்ஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது. தமிழ் படங்களில் கமிட்டாவதோடு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
கடந்த 2017ல் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இவரது நடிப்பில் கணவருடன் நடித்த மஜிலி படம் ஹிட்டாகிவிட்டது.
இந்நிலையில் சமந்தா நடித்துள்ள ஓ பேபி படம் திரைக்கு விரைவில் வரவுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ்காக ஒரு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதற்கு சமந்தா மிக கவர்ச்சியாக உடை அணிந்து வந்துள்ளார்.
தற்போது அவர் சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம். புதுபடங்களில் நடிக்க அவர் ரூ 3 கோடி கேட்கிறாராம். 96 படத்தின் ரீமேக்கில் நடித்து வருகின்றார் சமந்தா.