Home / பிக் பாஸ் / பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து என்னை அவமானப்படுத்தி வெளியேற்றிவிட்டார்கள்..! குமுறும் சரவணன்

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து என்னை அவமானப்படுத்தி வெளியேற்றிவிட்டார்கள்..! குமுறும் சரவணன்

பிக்பாஸ் வீட்டில் இருந்து யாருக்கு தெரியாமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர் சரவணன். அதில் இருந்து அவர் யாருக்கும் பேட்டி கொடுக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவர் முதன்முதலாக பேட்டி கொடுத்துள்ளார். அதில், நான் கூறிய கருத்திற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டும் பிக்பாஸ் ஏற்பாட்டாளர்கள் இப்படி செய்தது வேதனை அளிக்கிறது.

அது மட்டுமன்றி எனக்கு இப்படியொரு அவப்பெயரையும், கலங்கத்தையும் ஏற்படுத்தி என்னை வெளியே அனுப்புவார்கள் என்று தெரிந்திருந்தால் நான் பிக்பாஸிற்கு சென்றிருக்கவே மாட்டேன் என்கிறார்.

நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண்களிடம் அங்கு கண்ணியமாக தான் நடந்து கொண்டேன் என்று வருத்தத்துடன் பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *