பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். பல பிரச்சனைகளை கடந்து மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சி நாளை முடியவடைய உள்ளது. இதனால் பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். பலரும் முகென் தான் வெற்றியாளர் என கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் மற்றும் சினிமா பிரபலம், ஜே.எஸ்.கே.கோபி தன் டுவிட்டர் பக்கத்தில் முகென் தான் வின்னர் என அறிவித்துவிட்டார்.
BIGGBOSSல் வெற்றியாளராக #முகின் தேர்வு செய்யபட்டுள்ளார்!
— JSK.GOPI (@JSKGopi) October 5, 2019
இதை ரசிகர்கள் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாக்கி வருகின்றனர். முகென் ராவ். அவருக்கு ஆரம்பம் முதல் பெரும் ரசிகைகள் கூட்டம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.