Home / சினிமா / நான் தளபதியின் நாயகியாக இருந்ததற்கு பெருமைப்படுகிறேன் வெறித்தன டுவிட் பதிவில் பிக்பாஸ் வனிதா

நான் தளபதியின் நாயகியாக இருந்ததற்கு பெருமைப்படுகிறேன் வெறித்தன டுவிட் பதிவில் பிக்பாஸ் வனிதா

நடைபெற்றுமுடிந்த நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் பங்குபற்றி ரசிகர்களின் சில வெறுப்புகளுக்கு ஆளானவர் வனிதா. இவர் நிகழ்ச்சிக்கு பிறகு சீரியல்கள், திரைப்படங்கள் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி ஒரு சீரியலில்கூட வில்லியாக நடிக்கப்போகின்றாராம் வனிதா .

ஆனால் இன்னும் அவர் அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளியிடவில்லை. இன்று விஜய்யின் பிகில் படம் வெளியாகியுள்ளது, ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இதற்கும் நம்ம வனிதாவுக்கு என்ன சம்மதம் என்றுதானே நினைக்கறீங்க .

இதை நமக்கு தெரியப்படுத்த வனிதா, விஜய்யின் பிகில் குறித்து ஒரு டுவிட் போட்டுள்ளார். அதில் விஜய்யின் திரைப்பயணத்தில் முதல் தீபாவளி ஸ்பெஷல் படமே நாங்கள் நடித்த சந்திரலேகா படம் தான்.

நான் தளபதியின் நாயகியாக இருந்ததற்கு பெருமைப்படுகிறேன், எப்போதும் இருக்கும் என டுவிட் போட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *