Home / ஆரோக்கியம் / தினமும் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் கலந்து குடித்தால் இவ்வளவு நன்மைகள் இருக்கா…? இதோ தெரிஞ்சுகோங்க

தினமும் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் கலந்து குடித்தால் இவ்வளவு நன்மைகள் இருக்கா…? இதோ தெரிஞ்சுகோங்க

பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதை ஆங்கிலத்தில் அழகாக ’கோல்டன் மில்க்’ என்பார்கள். பெயரில் மட்டுமல்ல உண்மையில் நம் ஆரோக்கியத்திற்கு கோல்டன் பால் தான். நச்சு நீக்கியாக இருக்கும் மஞ்சளை பாலில் கலந்து குடிப்பதால் பல வகையான நன்மைகள் உள்ளன.

அதனால்தான் ஜப்பானில் இன்று வரையிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். அதில் மிக முக்கிய நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

மஞ்சள் தூள் பால் எப்படி செய்வது?

மஞ்சள் தூள் 1 டீஸ்பூன், 300 மிலி பால், பாலை நன்கு காய்ச்சி அதில் மஞ்சள் தூள் சேத்து காய்ச்ச வேண்டும். பிறகு இறக்கி வடிகட்டி ஆற வைத்து குடிக்க வேண்டும். அதனுடன் தேவைப்பட்டால் சிறி நாட்டு சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.

1. சுவாச நோய்

மஞ்சள் பால் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதோடு, இது பாக்டீரியா தொற்று, வைரஸ் நோய் போன்றவற்றை தடுக்கிறது. அது நோய்கள், சுவாச அமைப்பு, மசாலா மற்றும் உடல் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புக்கு விரைவான நிவாரணம் வழங்குகிறது.

2. புற்றுநோய்

இந்த பாலை குடிப்பதால் மார்பக, தோல், நுரையீரல், புரோஸ்டேட், மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களின் வளர்ச்சியை எதிர்த்து போராடுகிறது. புற்றுநோய் செல்களை தடுக்கும் மற்றும் கீமோதெரபியினால் ஏற்படும் பக்க விளைவுகள் குறைக்கிறது.

3. எலும்பு, மூட்டு

மஞ்சள் பாலை குடித்து வந்தால் கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் காரணமாக ஏற்படும் வீக்கத்தை குணப்படுத்த முடியும்.

4. இருமல்

மஞ்சள் பால் குளிர் மற்றும் இருமலுக்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்த்து போராடும் மருத்துவ குணம் கொண்டுள்ளது.

5. தூக்கமின்மை

வெதுவெதுப்பான மஞ்சள் பால் அமினோ அமிலம், டிரிப்தோபன் போன்றவற்றை உற்பத்தி செய்து அமைதியான மற்றும் பேரின்ப தூக்கத்தைத் தூண்டும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *