ஜோக்கர் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இதன்பின் பிரபல இயக்குனரான சமுத்திரக்கனி நடித்து வெளிவந்த ஆன் தேவதை படத்தில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். அண்மையில் அந்த நிகழ்ச்சி முடிவடைந்தது.
இந்நிலையில் தற்போது கொரானா ஊரடங்கு என்றதால் வீட்டிலிருக்கும் ரம்யா பாண்டியன் மேக்கப் இல்லாத புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேக் அப் இல்லா புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் மேக் அப் இல்லாமல் இன்னும் அழகாக இருக்கீர்கள் என அழகை வருணித்து கமெண்ட் அடித்து வருகிறார்கள்.