தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசன் மூலம் பிரபலமானவர் ரைசா. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்.
பின் சில படங்கள் கமிட்டாகியுள்ள அவர் அடிக்கடி போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் எப்போதும் பரபரப்பாக பேசப்படுவார்.
இந்நிலையில் தற்போது முதன் முறையாக தனது பெற்றோர்கள் திருமணமாகி எடுத்துக்கொண்ட முதல் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களை வாழ்த்தி பாராட்டி வருகின்றனர். தற்போது சமூக வலைத்தளங்களில் பெற்றோரின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.