Home / சினிமா / ஹீரோவாக அறிமுகலாகும் நடிகர் விஜயின் மகன் சஞ்சய் – எந்த ரீமேக் படத்தில் தெரியுமா..?

ஹீரோவாக அறிமுகலாகும் நடிகர் விஜயின் மகன் சஞ்சய் – எந்த ரீமேக் படத்தில் தெரியுமா..?

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த பிகில் வசூல் சாதனை படைத்தது.

விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் உள்ளார். இவர் தற்போது கனடாவில் உள்ள சினிமா நிறுவனம் ஒன்றில் படித்து வருகிறார்.

தற்போது கொரோனவால் விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அங்கு அவர் நலமாக உள்ளார் என தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் விஜய் மகன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதுவும் தெலுங்கில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த உப்பேனா திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் மாஸ்டர் ஷூட்டிங்கில் விஜய்யிடம் உப்பேனா கதையை கூறியுள்ளார் விஜய் சேதுபதி. அந்த கதைக்கு தனது மகனுக்கு பொருத்தமானது என்று விஜய் கூறியுள்ளார்.

அந்த படத்தில் ரீமேக் உரிமத்தை விஜய் சேதுபதி வாங்கியுள்ளார். இருப்பினும் இந்த தகவல் உண்மையா என்று அதிகாரப்பூர்வமான தகவல் வரும்வரை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *