சிவகார்த்திகேயன் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு பெரிய வரவேற்பு எதுவும் பெறவில்லை.
இந்நிலையில் அட்லியின் உதவியாளரான போஸ்கோ ஹீரோ கதை தன்னுடையது என எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அதன் பின் பேச்சுவார்த்தைக்கு மித்ரன் மறுத்ததால். நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னரே படம் வெளியாகிவிட்டது. தற்போது நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. தீர்ப்பு இயக்குனர் மித்ரனுக்கு எதிராக வந்துள்ளது.
இதனால் ஹீரோ திரைப்படத்தை சாட்டிலைட் டிவி மற்றும் ஓடிடி தளத்தில் வெளியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.