அஜித்குமார் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். தற்போது இவர் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார். கொரோனா காரணத்தினால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2000ல் நடிகை ஷாலினையை திருமணம் செய்து கொண்டார். தற்போது இரு குழந்தைகள் உள்ளனர். அஜித் திருமணத்திற்கு பிறகு சில காரணங்களால் விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார்.
இந்நிலையில் மே 1ல் அஜித்தின் பிறந்தநாள் பிறந்தநாளுக்காக சில வீடியோக்கள் வைரலாகும் நிலையில், அவரது மனைவி பற்றி சில ஆண்டுகளுக்கு முன் கொடுத்த பேட்டி வைரலாகியது.
அதில் அமர்களம் படம் நடித்து வந்தநிலையில் ஒரு தயாரிப்பாளர் என்னிடம் வந்து ஷாலினி நடிக்க மறுத்து வருகிறார். நீங்கள் அவரிடம் பேசுங்கள் என்று கேட்டுள்ளார். இதற்கு நான் பேசி பார்க்கிறேன் என்று கூறினேன்.
மேலும் ஷாலினி நடிக்க சம்மதம் வாங்க நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். அதன்பின் சில படங்களில் நடிக்க என்னிடம் சம்மதம் தெரிவித்து நடித்து கொடுத்துள்ளார் என்கிறார். அவரே கூறிய இந்த வீடியோ வைரலாக பகிர்ந்து வருகிறார்கள் ரசிகர்கள்.