தெய்வம் தந்த வீடு சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மேக்னா வின்செண்ட். இதன் மூலம் அவர் பல மாமியார்களில் அன்பை பெற்ற பொறுமை சாலி மருமகளாகிவிட்டார்.
மலையாளத்தை பூர்வீகமாக கொண்ட அவருக்கு இந்த சீரியலே தமிழில் முதல் அறிமுகம் என்று சொல்லலாம். பின் பொன்மகள் வந்தாள், அவளும் நானும் சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
கடந்த 2017 ல் டான் டோனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்தின் பின் ஓராண்டிலேயே கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து தனியே வாழந்து வந்தனர். இதனால் அவர்கள் நீதிமன்றத்தை நாடி பரஸ்பர விவாகரத்து பெற்றுள்ளார்களாம்.
தற்போது நடிகை மேக்னா சக சீரியல் நடிகர் விக்கு இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இருவரும் இரண்டாம் திருமணம் செய்யயுள்ளதாக தற்போது தகவல் கசிந்துள்ளது.