அஜித் ரசிகர்களுக்கு அவர் நடித்த எல்லா படமும் பேவரெட் தான். ஆனால் அதிலும் அவர் நடித்ததில் மோஸ்ட் பேவரெட் படமாக எல்லோருக்கும் இருப்பது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
அந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்த படம். கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் படத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. இப்படம் வெளிவந்து 20 வருடம் ஆகியுள்ளது.
இதற்காக ராஜிவ் மேனன் பேசும் போது, சந்தனே தென்றலே பாடல் எடுக்கும் போது அஜித் கண்கள் கலங்கியே இருந்தது.
அப்போது ஏன் அஜித் என்று கேட்ட போது, சார் முதுகு ரொம்ப வலிக்குது என்று சொல்லிவிட்டு, வாங்க சார் இந்த ட்ரெயின் போகும் போதே இந்த காட்சியை எடுத்துவிடலாம் என கூறினாராம். இதை கேட்ட அனைவரும் அதிர்ச்சியாகி நின்றனர் என்றார்.