நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டர் என்று அழைக்கப்படுபவர். இவர் சோலோ ஹீரோயினாக பல படங்களில் நடித்து அதை ஹிட்டும் கொடுத்து அசத்தியவர்.
தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் அவ்வப்போது வெளியே செல்லும் போது எல்லாம் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களிலும் வெளியிடுகிறார்கள், ரசிகர்களும் வைரல் ஆக்குகிறார்கள்.
இந்நிலையில் நயன்தாரா வேறு ஒரு நடிகருடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் என்று ரசிகர்கள் கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.
இருப்பினும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது ஆரம்பம் படத்தின் காட்சி என்றும், அது வேறு ஒரு இளம் நடிகை என்றும் கூறி வருகிறார்கள்.