சமீபகாலாமாக சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. அவர்களுக்கு பெயர், புகழ் இருந்தாலும் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்வது ரசிகர்களுக்கு மன வேதனை தரும் செய்தியாகின்றது.
இந்நிலையில் சீரியல் நடிகை சித்ரா நேற்று திடீர் தற்கொலை செய்துகொண்டு அனைவருக்கும் பெரிய வலியை கொடுத்துள்ளார். அவரின் மரணம் தற்கொலையா, கொலையா என விசாரிக்கப்பட்டு வருகிறது.
இது போல சின்னத்திரை தற்கொலைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இதுவரை தற்கொலை செய்த சீரியல் பிரபலங்களின் லிஸ்ட் இதோ.
கடந்த ஏப்ரல் மாதம் மண்வாசனை சீரியலில் நடிகை பிரதியுஷா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் வாய்ப்பு இல்லாததால் தற்கொலை செய்துகொண்டார்.
மௌன ராகம் சீரியல் புகழ் ஸ்ரவானி கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரசி சீரியல் நடிகர் பாலாஜி யாதவ் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார்.
வைஷ்ணவி 2006 ல் ஏப்ரலில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வம்சம், தென்றல் சீரியலில் நடித்த முரளி மோகன் 2014 வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.